பழசு கண்ணா பழசு !!


ஒரு சின்ன வேல காரணமா ... நான் இன்னக்கி DPI போயிருந்தேன் ... அப்படி அங்க சுத்திகிட்டு இருந்தப்போ .. " மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டி " ( Madras Literary Society )போர்டு
பாத்து அசந்துட்டேன் . என்னாடா ஒரு போர்ட பாத்துட்டு அசந்துடானேனு நீங்க நினைக்க கூடாது . நான் அசந்தது அந்த போர்டு ஒரத்துல கொஞ்சம் சின்னதா Est 1812 ! அப்படிங்கிறத பாத்து . ஆஹா ... பழசு.. பாத்துரவேண்டியதுதான் அப்படினு உள்ளே நுழைந்தேன் .
பழங்காழத்து கட்டிடம் ... அங்கங்க விரிசல் . என்னை வரவேற்றது பார்வையாளர்களின் வருகை பதிவேடு .

என்னோட ஆட்டோகிராப்பை போட்டுட்டு . உள்ளே சென்று ஒரு அகல பார்வை பார்த்தேன் ,பெரிய , மிக பெரிய ஒரு ஸ்டீல் ராக் (Steel Rack) முழவதுமாக ... தூசி படிந்த புத்தகங்கள் . ஸ்டீல் ராக்கின் ( Steel Rack) உயரம் சுமார் 30 அடிக்கு மேல். அதுல ரெண்டு மாடி இருக்கு , மாடி எறுவதற்கென்றெ ஒரு ஏணி , அதில் ஏரி புத்தகம் தேடுவதற்கென்றே உள்ளது , நான் அது மாதிரி ஒரு செட்டப்ப ... சினிமாவில் மட்டுமே பார்த்து இருக்கிறேன் . இது இல்லாம ஒரு 30க்கும் மேலான ஆலமாரிகளில் புத்தகங்கள் . சரி மேட்டருக்கு வருவோம் ..

" மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டி " 1812 ஆம் வருஷம் சர் ஜான் நியுபோல்டு மற்றும் பாபிங்டன் அவர்களால் நிறுவப்பட்டது . இது ஆசியாடிக் சொசைட்டி ஆப் கல்கத்தா (ஏச்ட் 1784 ) வின் வழித் தொன்றலாகவும் பார்க்கபடுகிறது .இங்கு 80,000 புத்தகங்கள் உள்ளனவாம் .
17 ஆம் , 18 ஆம் , 19 ஆம் நுற்றாண்டு பழைமை வாய்ந்த புத்தகங்கள் கானக் கிடக்கிறது . அவைகளின் பக்கங்கள் மடித்தால் உடைந்து விடுகின்றன . பல என்சைக்குலொபிடியா பார்தேன் ... அதுல இருக்குற ஆங்கிலத்த ... எழுத்து கூட்டி படிச்சா கூட என்க்கு புரியல ... அவ்வளவு பழசு .இங்கு இருக்கும் புத்தகங்கள் , இலக்கியம் , கலை , வரலாறு , தத்துவவியல் ,மற்றும் புவி இயல் சார்ந்தவைகள் .

என் கண்ணுக்கு தெரிந்த பழைய வாசிக்க முடிந்த புத்தகங்கள்

1. The encylopedia of jewish
2. An epic of America
3. Imperail gazztee of india - 1908
4. Bengal Civilization

இதல்லாம .. பல பழங்காலத்து படங்கள், நாட்டின் வரைபடங்கள், சர்வே புத்தகங்கள் நிறையவே தென்படுகின்றன.
மிகவும் பழமை வாய்ந்த, முக்கியமான புத்தகங்களை அவர்கள் ஃபிரிஸ்சர்வு செய்கின்றனர் ( Restoring the oldest books thru new preservation methods )

மிகவும் பழமை வாய்ந்த புத்தகம்
1. Arretolis Opera Omania QVAE Extant Graece and Latine - 1619
2. A history of Buckingham canal Project .

இங்கு , ஆங்கிலம் , கிரேக்கம் , லத்தின் , சான்ஸ்கிரிட் , அரபிக் , திபெதியன் , ஆகிய மொழி புத்தகங்கள் உள்ளன. தமிழ் புத்தகத்தை தேடி இங்கு செல்ல வேண்டாம் , என்னா ...அங்க அது இல்ல..

இங்கு நிங்களும் உறுப்பினர் ஆகலாம் , ருபாய் 500 /- மட்டுமே.
The Madras Literary Society College Rd ,
Nungambakkam Chennai -6 ( Inside DPI campass )

யார் அந்த தாத்தா..!

அதாங்க School - ல படிக்கும் பொது டிசம்பர் மாச கடைசியா பாத்து ஒரு குண்டு பையனுக்கு சிவப்பு கலர் பெரிய சட்டை பொட்டு , அதுக்குள்ள ஒரு தளவானி வச்சு ... பஞ்சுல .. தாடி வச்சு ... அவன் முடிய வெள்ளை ஆக்கி , அஞ்சு பைசா மிட்டாயா தூக்கி விசிக்கிட்டே .. நடந்து போவாரே ... அவர்தாங்க ...


என்க்கு ஏன் அவர் மேல இவ்வளவு ஆசை ..என்னா ஒரு தடவ லக்கி டிப்புல (லக்கிலூக் இல்லங்க )கிலுகிலுப்பை இனாமா கொடுத்தாரு ... அதனாலயும்தான் .

அவரு நல்லவரு, வல்லவரு , நாளும் தெரிஞ்வரு , அப்படினு அள்ளி விடாம .. உண்மைய எழுதலாமே இனையதில் தேடினா.... அவர பத்தி பல கதைகள் இருக்கு .. உங்களுக்கு வேற வழியே இல்ல.. நான் சொல்ல போற கதையையும் கேளுங்க ...



தமிழில் செல்லமாக " கிறிஸ்துமஸ் தாத்தா " என்று அழைக்கபடும் சான்டா கிளாஸ், அந்த வருடத்தில் நல்ல பிள்ளைகளாக இருந்த குழந்தைகளுக்கு அன்பளிப்பை வருட கடைசியில், (அதாவது கிறிஸ்துமஸ் இரவு) வழங்குவதை தொழிலாக கொண்டவர்.


சான்டா கிளாஸ் என்ற பெயர் அமெரிக்கர்கள் தப்பாக உச்சரித்த சின்டர்கிளாஸ் என்ற டச்சு வார்த்தையிலிருந்து வந்தது, சின்டர்கிளாஸ் என்ற பெயரும் செயின்ட் நிக்கொலாஸ் என்பவரின் பெயரின் சுருக்கமே. செயின்ட் நிக்கொலாஸ் ஆசியா மினார்( தற்போதய துருக்கியின் ஒரு பகுதி) - ல் பிறந்தவர். தனது 19 ம் வயதில் கத்தொலிக்க பாதிரியார் ஆனார் . பின்னர் பிசப்பாகவும் பணி செயதார். இவர் தனது சொத்துகள் அனைத்தையும் ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்து அளித்துள்ளார் .
வரலாறு அவரது நினைவாக செயின்ட் நிக்கொலாஸ் நாள் என்ற ஒரு தினத்தை டிசம்பர் 6 ஆம் தேதி கொண்டாடினார்கள்.அந்த தினத்தில் அன்பளிப்பை பகிர்ந்து மகிழ்ந்தனர் மக்கள்.நாளடைவில் இந்த அன்பளிப்பு பகிர்வு கிறிஸ்மத்தொடு இனைந்தது கொண்டது.



சான்டா கிளாஸ் பாரம்பரியாமாக , சிவப்பு நிற ஆடையும் , வெண்னிற தாடியும் ,தொந்தியும் தொப்பையுமா காட்சி அளிப்பார் . அவர் அன்பளிப்பு பொட்டலங்களையும் சுமந்து கொண்டெ எங்கும் செல்வார் .
அவருடைய உருவ அமைப்பை பல கம்பெனிகளும் தங்கள் விளம்பரங்களில் பயன்படுத்துகின்றனர்.


இப்படி பல கதைகள் அவர் பெயரில் இருந்தாலும், அவர் நினைவுபடுத்துவது " பகுத்துன்டு பல் உயிர் ஒம்புதல் " தான் .

அப்படியே , என்னுடைய " இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை " உங்கள் எல்லோருக்கும் சொல்லி தற்போதைக்கு விடை பெறுகிறேன்.

கண்ணிர் அஞ்சலி .

அன்ரன் பாலசிங்கம் (1938-டிசம்பர் 14, 2006)



தமிழ் மக்களையும், தமிழீழ மண்ணையும் ஆழமாக நேசித்து, கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இதயத்தில் விடுதலைக் கனலை சுமந்து இறுதிவரை ஓயாது உழைத்த, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான மதிப்புக்குரிய கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், டிசம்பர் 14 2006 காலமாகியுள்ளார்.


தமிழினத்தின் அடிநாதமாக, தமிழீழ தேசியத் தலைவரின் குரலாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூச்சாக நின்ற, மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், இன்று எம்மை விட்டு பிரிந்து விட்டார். டிசம்பர் 14 2006, பிற்பகல் 1:45 மணிக்கு, மதியுரைஞரின் உயிர் மண்ணுலகில் இருந்து பிரிந்தது.

தனது சொல் வன்மையாலும், ராஜதந்திர மதியூகத்தாலும், அணையாத விடுதலை வேட்கையாலும், தமிழீழ மக்களையும், உலகத் தமிழர்களையும், ஆட்கொண்ட மதியுரைஞர், இன்று எம்மைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். எல்லோரது இதயத்திலும் இடியாக விழுந்துள்ள மதியுரைஞரின் பிரிவால் தமிழினம் துடித்து நிற்கின்றது.

சத்தியத்தை சாட்சியாக வரித்து, தணியாத விடுதலை வேட்கையுடன் வாழ்ந்து, வீறுகொண்ட விடுதலைப் போராட்டத்தை அடிநாதமாகக் கொண்டு, தமிழ் மக்களை ஆழமாக நேசித்து, தமிழீழத்தின் ராஜகுருவாக திகழ்ந்த மதியுரைஞரைப் பிரிந்து, தமிழினம் ஆற்றுப்படுத்த முடியாத துயரில் மூழ்கியுள்ளது. உயரிய சத்தியத்திற்காக வாழ்ந்து, விடுதலைக்கு விதையாகி வீழ்ந்த மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், என்றென்றும் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் நிலைத்து நிற்பார்.

அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு ''தேசத்தின் குரல்'' எனும் கெளரபட்டம் -- தமிழீழ விடுதலைப் புலிகள்

-- செய்தி , http://www.pathivu.com/- லிருந்து எடுக்கபட்டது

நல்ல அட்வடைஸ்மென்ட் .

நல்ல அட்வடைஸ்மென்ட் பார்க்கும் பொது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும் .இன்று நான் பார்த்து ரசித்த சில .. நம் பார்வைக்கு..























என்ன அருமையா யொசிச்சிருக்கான் ... பெங்களுர் போன்ற நகரங்களில் ... இது தேவையானா விளம்பரம்தான்

























மினி ஸ்கிர்ட் .. வேண்டாங்கிறத ... என்ன அழகா சொல்லியிருக்காஙய.....
























கசங்கின சட்டைய பொடாதிங்க , அப்படினு வாய் கூசாமா அற்புதமா சொல்லி இருக்காங்க.

இன்று..

நேத்து ... நைட்டு சினிமாவுக்கு போனதுனால... லெட்டா தான் எழுந்துரிச்சென் ...

10:15 பஸ் பிடிச்சு ... அதுவும் .. ஆப்பிஸ் பஸ் தான் ... 11:30 ஆப்பிஸ் வந்தென். பத்து நிமிசம் official mail செக் பண்ணினென் ...

ரொம்ப பெருசா ஒன்னும் இல்ல ... சரி பொயி ஒரு coffee குடிச்சிட்டு வரலாம்முனு ...
பக்கத்துல இருக்கிறவரை கூப்பிட்டேன் ... அவரும் ரொம்ப சந்தொசமா ... வந்தாரு ...
காப்பிய குடிச்சிட்டு வந்து ...

என்ன பண்ணாலாமுனு நெனச்சிகிட்டெ... தமிழ்மணத்துக்கு பொயி பாத்தென் ... அங்க கொஞ்சம் மக்கள் .. Blogs' க்கு டாட்டா காட்டி இருந்தாங்கா ...

நல்லாதான் இருந்தானுங்க ... அப்படினு ... நேனச்சிகிட்டு இருக்கும் பொதெ...

அடடா ... மேனெஜர் .. ட்ரைனிங் குடுக்க சொனாரே ... சரி ... freshers .. ரெண்டு பேரை கூப்பிட்டு ... " I will send some documents , pls read those .. let me discuss that tommorrow " அப்படினு சொல்லிட்டு .. திரும்பவும் தமிழ்மணத்துக்கு பொயி பாத்தென்..

அடடா .. இவ்வளவு கேவலமா ... சாதிச் சண்டைய போட முடியுமா ... நெனச்சு .. வருத்தபட்டு கிட்டெ..

விருப்பமான ... ஈழத்து வலைய தளங்கள்.... ஒரு சுற்று வந்தென் ...
அதற்க்குள் .. ஒரு official mail வந்தது ...

அய்யயோ ... அந்த வேலய.. முடிக்கலயே ... சரி சாப்பிட்டு வந்து முடிக்கலாம் ...
" shall we go for lunch " ஒரு முனு பேர் ..உடனே ... " yes .. Let us .."
குப்பையானா சாப்பாட சாப்பிட்டு ... ஒரு ரவுன்டு அப்பிஸ .. சுத்திட்டு ... இப்பவெ ..கண்ண கட்டுதே ... அப்படினு .. சொல்லிகிட்டே ... திரும்ப பொட்டி தட்ட வந்தென் ..

அந்த சின்ன வேலய .. 10 நிமிச்த்துல முடிச்சிட்டு ...

திரும்பவும் ...தமிழ்மணத்துக்கு பொயி பாத்தென்..
எப்படி டா... இவனுங்க தொடர்ந்து ... Blogs 'ச் எழதுறாங்க ... அப்படினு யொசிச்சிகிட்டே....

பல .. சண்டைகள் .. ப்ளாக்ஸ் பத்துட்டு ... எக்கெடொ கெட்டு போறாங்ய ..

சரி டீ சாப்பிட்டு வந்து சண்டைய படிப்போம் ..." Shall we go for a tea ? " என்ற குரலுக்கு .. சில பதில் குரல்கள் .. " yes .. Let us .." என்றது ...

எப்படா இவன் கூப்பிடுவானூ பாத்துக்கிட்டெ ... இருப்பாங்க.. போலயிருக்கு ..

திரும்ப வந்து ... ஒரு சின்ன டிஸ்கசன ... மேனெஜர் கூட போட்டுட்டு..

திரும்பவும் தமிழ்மணத்துக்கு பொயி .. சில நல்ல பதிவுகலை படிச்சன் ... சரி நம்ம என்ன எழுதுறதுனு யொசிச்சு பாத்தா ... ஒன்னுமெ ... தொனல...

சரி .. வீட்டுக்கு பொறத்துக்கு முன்னாடி ... இத எழதிட்டு போவொம் ..

சரி நாளைக்கு வந்து பாப்போம் ... இத படிச்சிட்டு எத்தன பேரு டாட்டா காட்டுட்றாங்கனு....

About me

  • I'm சுந்தர் / Sundar
  • From chennai, tamilnadu, India
  • பெருசா சொல்றதுக்கு ஒனும் இல்ல Nothing Spl to tell
My profile

வேலைவாய்ப்பு கல்வி