அந்த ஒரு நாள் !!

என்று கிடைக்கும்
அந்த பாக்கியம்

என்றேனும் ஒரு நாள்
ஆம்
எதையும்
எப்போதும்
எங்கேயும்
எதிர்பார்த்திராமல்
வாழ கிடைக்கும்
அந்த நாளை

எதிர்பார்த்திருக்கிறேன் நான் !
கூடுதல் எதிர்பார்புகலோடு

ஆங்கிலத்தில் படித்து .. தமிழில் சிரிக்க !


Disclaimer : I am not responsible if you forget the basics ofEnglish grammar after reading this ...

English at its best?

In TN , well Known Person, Mr XXX, Chairman of a College Association,who is always try to speak in English...
X college Students have Collected & published the Book XXX's Spoken English...

Njoy with his English ....

Now, here are some classic English sentences from the great Mr.Xxx.

The stalwart talks to his students:
# About his family :

* I have two daughters. Both of them are girls...(?)

# At the ground:

All of you stand in a straight circle.

There is no wind in the balloon.

The girl with the mirror please comes her...{Means: girl withspecs please come here).

# To a boy, angrily:

I talk, he talk, why you middle middle talk?

# While punishing students:

You, rotate the ground four times...

You, go and understand the tree...

You three of you stand together separately.

Why are you late - say YES or NO .....(?)

# Sir at his best inside the Class room:

Open the doors of the window. Let the atmosphere come in.

Open the doors of the window. Let the Air Force come in.

Cut an apple into two halves - I will take the bigger half.

Shhh...Quiet, boys...the principal JUST PASSED AWAY in the corridor

You, meet me behind the class. (Meaning AFTER the class..)

Both of u three get out of the class."
Close the doors of the windows please. I have winter in my nose today...

Take Copper Wire of any metal especially of Silver..... Take 5 cm wire of any length....

Sir was too angry at one of his students ..he wanted to turn himout of the class.. but he forgot to say "Get Out" !!! what did he do?
he walked up to that boy and said:

Follow me. the boy followed. Both of them went outside the class.Now Sir said:

"Now dont follow me" and returned back to his classroom...

Last but not the least some Xxx experiences... Once Sir had come late to a college function, by the time he reached, the function had begun, so he went to the dais, and said, sorry I am late, because on the way my car hit 2 muttons (Meaning goats).

At XXX college day 2002: "This college strict u the worry no .... U get good marks, I the happy, tomorrow u get good job, Xxx the happy, tomorrow u marry I the enjoy"

At St. Xxx1 fresh years day 2003:"No ragging this college. Anybody rag we arrest the police"

" Boy Boy mingiling Xxx will allowGirl Girl mingling Xxx will allowbut No Boy Girl mingling . "


மனசுக்குள் பட்டாம்பூச்சி !

தினம் ஒரு பட்டாம்பூச்சி கூட்டம்
என் மனதுக்குள்ளும் .
வந்து வந்து போகின்றாயே...
ஏன் ஒரு நாள் தங்கிவிட்டு போயேன்
ஆசையுடன் நான்..
இன்று போய் நாளை வருகிறேன்
ஆசையுடன் பட்டாம்பூச்சி..
தினம் வரும் பட்டாம்பூச்சிக்காக
நான் மட்டும் தனியே என்றென்றும் !

இதன் பெயர் என்ன?


நான் செய்தது தவமா ..
கிடைக்க போவது வரமா ..
எப்போழுதும் கேள்விகளுடன் ..
இவள்தான் என்னவளா..

எனக்கு வந்த வாழ்த்து மடல்கள்

எனக்கு வந்த வாழ்த்து மடல்களில் , எனக்கு பிடித்திருந்தவைகள் உங்கள் பார்வைக்கு

சுந்தர் ,
அவன் அப்படி போன என்ன
இவன் இப்படி போன என்ன
நீ உன் வழியில் செல்
உலகை வெல்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

--------
டேய்.. நட்பு - வாழ்த்துக்கள் டா...
---------
ஹாப்பி ரிட்டன்ஸ் மச்சி.. குடியும் குடிதனுமா, மப்பும் மந்தாருமுமா இந்த நாளை கொண்டாடு..
----------
டேய் சுந்தர், " நான் பேச நினைப்பதெல்லாம் "

நீ பல

பட்டஙள் வென்று (dirty Boy & others)
குப்பைகள் போட்டு
Blogs'கள் படிச்சு
மறு-copy அடிச்சு
டுபாக்கூ'ர்கள் செய்து
Black'கள் வாங்கி (Train ticket, Cinima tickets & etc )
இன்று போல் என்றும்
இதய்ங்ளை கவர்ந்து
நல்ல நண்பர்களை வென்று
பல்லாண்டு வாழ ( you wish on, how many years )

எங்கள் மனமார்ந்த வாழ்துக்கள்

Alt + Ctrl + Del 'ஆகாஷ்'

======= முகில் ========


1998

'சுளையா ..சுளை சுளையா செமஸ்டருக்கு செமஸ்டர் முப்பதயிரம் ரூவா கட்டிருக்குல்லே .. எப்படியாவது அரியர்சையெல்லாம் க்ளியர் பண்ணிருலே 'ன்னு உள்மனசு கிடந்து குய்யோ முய்யோன்னு கதறுது ! இப்பதான் B.Sc Maths முடிச்சு MCA சேந்தாபுபல இருக்குது ஆனா வெட்டியா விமலாகிட்ட கடலை போட்டதுலயே ரெண்டரை வருசம் ஓடிப்போச்சு.

மவனே இதுவரைக்கும் அஞ்சு அரியர்ஸ் வைச்சிருக்க . இந்த அஞ்சாவது செமஸ்டர்லயும் எண்ணிக்கைக் கூட்டிராத, நெஞ்சு தாங்கது நாளைக்கு Oracle பேப்பர் இருக்குடா , படிடா .. படிடா .. அய்யோ இன்னக்குன்னு பாத்து மேட்ச் நடக்குதே . ஒரு ரெண்டு நிமிசத்துக்கு டிவிய போடலமா ..

1999

என்னாடா இது நமக்கு மேல ஃப்ராடா இருக்கு .. பைனல் செமஸ்டர் ஏதாவது ப்ராஜெக்ட் தேடலாம்னு சென்னைக்கு கிளம்பி வந்தேன். பெரிய கம்பெனிக்காரங்க எல்லாம் " நோ என்ட்ரி"ன்னு தொரத்துரான். சரி, ஏதாவது சின்ன கம்பெனில பட்டறையைப் போடலாமுன்னு இங்க வந்தென். இனிக்க இனிக்க பேசி பத்தாயிரம் கொடுன்னு பதிவுசா கேட்டான் . சரி , இப்பவாவது ஏதாவது கத்துகலாமேன்னு சொல்லி நானும் கொடுத்தேன். வாரம் ஒரு மணி நேரம் கம்ப்யூட்டர்ல சீட்டு விளையாண்டுகிட்டு உட்கார்ந்தேன்.

ரெண்டு மாசம் முடிஞ்சே போச்சு. இன்னிக்கு மூஞ்சிக்கு முன்னாடி, 'ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் ' , லைப்பரரி மேனேஜ்மென்ட் ', பில்லிங் மேனேஜ்மென்ட் 'னு முணு சர்ட்டிபிகேட்டை துக்கிப் போட்டு , 'உன் ப்ராஜெக்ட் முடிஞ்சது .இதுதான் சர்ட்டிபிகேட் .எது வேணுமோ எடுத்துக்கோ'ன்னு சொல்லுரான். ப்ராஜெக்ட் வைவா-ல எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியயே?

2000

வேலை தேடப் போறேன்னு சென்னைக்கு வந்து கொடி நாட்டியாச்சு, முணு மாசமாச்சு. வீட்டுல இருந்து வர்றா பணத்துல, பக்கத்துல இருக்கு மெஸ் புண்ணியத்துல வாழ்க்கை சுமுகமா ஒடிக்கிட்டிருக்கு. எதாவது கம்பெனில இன்டர்வியுக்குன்னு போனா , முத ரவுண்டுலயே நம்ம முகமூடிய டார்டாரா கிழிஞ்சுடுது. VB , Oracle, C++ .. இதெல்லாம் படிச்சிருக்கேன்னு சொல்லி வெளிய தல காட்ட முடியல. எவனாவது ஒருத்தன் VB கத்துக்குறதுக்குன்னு சம்பளம் இல்லாம வேல கொடுத்தாக் கூட சேந்துரலாம். அவனாவன் கேக்குற கேள்வியை பார்த்தா, ஜப்பான்காரன் பாஷை மாதிரி புரியவே மாட்டேங்குது

இப்படியே போய்க்கிட்டிருந்தா சென்னைல நீ கிழிச்சது போதும் , ஊரு பக்கமா வாந்து நம்ம கடையிலேயே உக்காருன்னு உத்தரவு போட்டுருவாங்க. இப்பொதைக்கு பிஸினஸ்ன்னு குவாலிபிகேஷனை காட்டி , ஏதாவது டேட்டா என்ட்ரி வேலைக்கு போகலாம் . மாசம் ரெண்டாயிரம் ரூவா கிடைக்கும்

2001

அரியர்ஸ் கணக்கை பைசல் பண்ணியாச்சு. ஆகாஷ் MCA வருங்காலத்துல என் கல்யாணப் பத்திரிக்கைல வக்கனையாப் போட்டுக்கலாம். கூடிய சிக்கீரம் இந்த எலவு டேட்டா என்ட்ரியை விட்டு வெளிய வரணும். விட்டா, இதுலயே சிக்கிச் சீரழிஞ்சு முன்னேறிறுவேனான்னு பயமா இருக்கு.

பீல்டு மாறனும் . ஆங் .. அது என்ன .. Oracle .. Oracle .. ஆதுல அட்வான்ஸ் கோர்ஸ் ஏதாவது சேர்ந்து, அதையாவது ஒழுங்கா படிச்சு , நல்ல வேலைக்கு போகனும் . கூட படிச்சவனெல்லாம் பத்தாயிரம் , பதினைஞ்சாயிரம் சம்பாதிக்கிறேன்னு மெயில் வழியா வயிறெரிய வைக்குறானுங்க. விமலாக்கு வேற கல்யாணம் ஆயிருச்சு. அடுத்த வாரம் புருஷனோட USA போறாளாம். டேய் ஆகாஷ் இன்னும் boot ஆகாத சிஸ்டமாவே இருக்க ?

2002

'டேட்டாவோர்ல்ட் கம்பெனில சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டரா ஒரு வருஷம் , ஜே&ஜே பிரைவேட் லிமிடெட்ல ப்ரோகிராமரா ஒன்றரை வருஷம், அப்புறம் அது என்ன , ஆங் ஸ்வஸ்திக் சாஃப்ட்வேர்ஸ்ல ஆரக்கிள் ப்ரோகிராமரா கடந்த ரெண்டு வருசமா வேலை பத்துக்கிட்டிருக்கேன். இப்போ நான் வாங்குற சம்பளம் எட்டாயிரம் ' இந்த டயலாக்கை நியாபகப்படுத்தி சொல்லி பார்த்துக்குவேன் . ஏன்னா அப்படித்தான் என்னோட ரெஸ்யூம்ல போட்டிருக்கேன்.

ஆமாங்க .. Fake-தான். 100% சுத்தமான பொய்களால் நிரப்பப்பட்ட ரெஸ்யூம்தான். 'Fake போட்டு வாழ்வாரே வாழ்வார் - மற்றோரெல்லாம் பிழைக்க தெரியாதாவர்'ன்னு வள்ளுவரே சொல்லி யிருக்காரெ!. இதே Fake ரெஸ்யூமோட கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கிட்டிருக்கேன். எதாவது கன்டிஷனைச் சொல்லி, Query எழுதச் சொல்லுறான். Worry ஆகிப் போகுது. எப்படி ஒரு டேட்டா பேஸை Backup எடுப்பேன்னு கேக்குறான் அதுல நான் Packup ஆயிடுறேன். பிள்ளையாரே, எனக்கு மட்டும் ஒரு வேலை கிடைச்சுட்டா, 1008 Oracle Query எழுதி உனக்கு மாலையாப் போடுறேன்.

2003

டேய் ஆகாஷ் .. உன்னை நல்லவன்னு நம்பி ஒருத்தன் வேலை கொடுத்துட்டான்டா! சம்பளம் வேற 15000னு சொல்லிட்டான். ஜாய்ன் பண்ணி ஒரு வாரமாச்சு. என்னை எந்த ப்ராஜெக்ட்ல போடப் போறான்ங்கன்னு தெரியல, ஏதோ சமாளிக்கிற அளவுக்கு Oracle தெரியும் , எடக்குமக்கா எதாவது வேலை கொடுத்து, கோக்குமாக்க நான் முழுச்சி, இவன் Fake- தான்னு கண்டுபிடிச்சிருவாங்களோன்னு அடிவயிறு ரிமைண்டர் வைச்சு அரை மணி நேரததுக்கு ஒருமுறை கலங்கிக்கிட்டே இருக்கு.

இவ்வளவு நாள், மாசம் ரெண்டாயிரத்தை வைச்சே இன்பமா வாழ்ந்துட்டேன். இனிமே மாசம் 15000 ரூவா வரப் போகுதே .. அவ்வளவு பணத்தை எப்படிச் செலவழிக்க? பீட்ச்சா, பீட்டர் இங்கிலான்ட், கிரெடிட் கார்டு, டிஸ்கோதேன்னு உன் வாழ்க்கையே மாறப் போகுதுடா மச்சான்!

2004

கொய்யால .. பதினைஞ்சாயிரம் சம்பளம் கொடுத்துட்டு, முப்பதாயிரத்துக்கு வேலை வாங்குறானுங்க. கடைசியா என்னிக்கு வீட்டுக்குப் போனேன்னு மறந்து போச்சு. தீபாவளிக்கு லீவு தர மாட்டேனுட்டானுங்க.கேட்டா, அமெரிக்கன் க்ளையண்ட். தீபாவாளி அன்னைக்கி முக்கியமான call வரும். இருந்தே ஆகணுங்கிறாரு என்னோட ப்ராஜெக்ட் மேனேஜர். நான் எப்படியோ போராடி ஒருநாள் லீவு வாங்கி, ஊருக்குக் கிளம்பிட்டேன்.

பஸ, டிரெயினு எதுலயும் டிக்கெட் இல்லாம கஷ்டப்பட்டு ஒரு டப்பா பஸ புடிச்சு ஊர் பக்கத்துல போறேன். கம்பெனில இருந்து போன் வருது. 'ஆகாஷ், உடனே கிளம்பி வாங்க. கோடிங்ல நிறைய Bug இருக்கு'ன்னு ப்ராஜெக்ட் மேனேஜர் மிரட்டுறாரு.'சார் இப்பத்தான் ஊருக்குள்ளேயே போகப் போறேன்'ன்னு பரிதாபமா சொல்லுறேன். . 'நோ ப்ராப்ளம் . அடுத்த பஸ்ஸை பிடிச்சு வந்திருங்க'ன்னு கூலா சொல்லுறாரு. ம்கூம் ..இது தாங்காது கம்பெனி மாறிட வேண்டியதுதான்.

2005

இந்த வடுசத்துலேயே ரெண்டாவது கம்பெனி மாறப்போறேன். நெட் சாலரி 4 லட்சம் தர்ரேன்னு சொல்லிருக்கான். லாப்டாப் தர்றதா சொல்லிருக்கான். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி 50 கிலோ இருந்த நான், இப்ப 80-ஐத் தொடப் போறேன். தொப்பையைக் குறைக்கனும். ஜிம் போகனும்.ஏன்னா வீட்டுல பொண்ணு பாக்குறாங்க.

2006
நான் இப்போ PM ஆகிட்டேன். அதான் ப்ராஜெக்ட் மேனேஜர். இப்ப கொஞ்ச பேரை இண்டர்வியூ எடுத்துக்கிட்டிருக்கேன்.

'பேரு என்ன, சுபாஷா .. ஓகே.. SQL -ல உங்க ஸ்ட்ரெங்த் என்ன? இப்ப எங்க வொர்க் பண்ணுறீங்க? Oracle ப்ரொகிராமரா எத்தனை வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் ? Ok we will call you later '

அந்த பையன் போயிட்டான் . முசப் புடிக்கிற நாய மூஞ்சிய பாத்தா தெரியாது! Fake ரெஸ்யூமை வெச்சிக்கிட்டு என்கிட்டயே டகால்டி வேலை காட்டுறான். அவனுக்கு இன்னும் இண்டர்வியூல நடிக்கத் தெரியல. போகப் போக கத்துக்குவான். நான் அவனை செலக்ட் பண்ணப் போறதில்லை . நாங்கள்ளாம் எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியும்ல ?

பின் குறிப்பு
எழுதியவர் : முகில் ( எனக்கு மின்னஞ்சலில் வந்துச்சு )
சுட்டது : சுந்தர் ( தட்டச்சு செய்தது நாந்தானுங்கொ )

இது சுட்டதுங்கொ.......


சுட்டிப்பைய்யன் : சார் , என் தலை' ல எரும்பு ஏறுது பாருங்க ..!
வாத்தியார் : அதை எடுத்து போடாம , ஏண்டா என்கிட்ட சொல்ர ?

சுட்டிப்பைய்யன் : நீங்க தானே சார் சொன்னீங்க ,! என் தலை' ல ஒன்னுமே ஏறலனு ?
______________________________________________________________

ஸ்டுடென்ட் 1 : நம்ம டீச்ச்ர்க்கு என்ன ஆச்சு ?

ஸ்டுடென்ட் 2 : ஏன்டா ??

ஸ்டுடென்ட் 1: இப்ப தானெ பொர்ட்' ல திருக்குறள்' அவறே எழுதிட்டு, " திருக்குறள்' ள எழுதினது யாரு" னு கெக்குராரு?
___________________________________________________________

வாத்தியார் : அமேரிக்காவை கண்டு பிடிச்சது யாரு ??

சுட்டிப்பைய்யன் : அமேரிக்காவை மறைச்சி வச்சது யாரு ? அத மொதல்ல சொல்லுங்க சார் ..!
_____________________________________________________________

டீச்சர் : படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா போதும்.

சுட்டிப்பைய்யன் : ஸ்கூல்லையா ?? வீட்லையா சார் ??
____________________________________________________________

டீச்சர் : (1)ஒரு தவளை இருக்கு ,

(2) கப்பல் ஒன்னு மூழ்கிகிட்டு இருக்கு,

(3) உருளைகிழங்கு விலை ரூ 3 ஒரு கிளோ . அப்ப எனக்கு வையசு என்ன??

சுட்டிப்பைய்யன் : 32 இருக்கும் சார் .

வாத்தியார் : உனக்கு எப்படி தெரியும் ?

சுட்டிப்பைய்யன் : அதுவா சார் ..! , என் தங்கைகு வையசு 16, அவ ஒரு அர-லூசு , அத வச்சி தான் சொன்னேன்.
_______________________________________________________________

நோயாளி : டாக்டர், நீங்க எழுதிக் குடுத்த TONIC'la காலைல ஒரு மூடி , ராத்திரிக்கு ஒரு மூடி சாப்பிட சொன்னீங்க ??

டாக்டர் : ஆமாம் ,

நோயாளி : ஆனா , அந்த Tonic பாடிட்லெ ' ஒரெ ஒரு மூடி தானெ இருக்குது ?

டாக்டர் : ...??
___________________________________________

நோயாளி : டாக்டர் ..! எனக்கு தினமும் 16 மனி நேரம் தூக்கம் வருது..! அதுக்கு அலுப்பு தானே காரணம்..?

டாக்டர் : அதுக்கு காரணம் அலுப்பு இல்ல..! " கொழுப்பு"..
__________________________________________

டாக்டர் : உங்க கனவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவை படுது .. இன்தாங்க மாத்திரைகள் ...!

மனைவி : டாக்டர் , இதை எப்பொ நான் அவருக்கு குடுக்கனும் ?

டாக்டர் : இந்த மாத்திரைகள் அவருக்கு இல்லை , உங்களுக்காக குடுத்தது ..!
___________________________________________

டாக்டர் : முதல்ல , மீண் , நன்டு , கொழி சாபிடுறதெல்லாம் நீங்க உடனடியா நிருத்தி யாகனும்..!!

நோயாளி : டாக்டர் ..!! இது என்னங்க அநியாயம்..! அதுங்க சாபிடுரத போய் நான் எப்படி நிருத்த முடியும்??!
__________________________________________

டாக்டர் : காதுல பல்லி போகுற வறைக்கும் என்ன பன்னிட்டு இருந்தீங்க ?

நோயாளி : மொதல்ல கரபாண் பூச்சி தான் டாக்டர் போச்சி.>!, அத புடிக்க தான் போகுதுனு நினைச்சேன்..!
_________________________________________________________________

விருந்தில் முதன் முதலில் இனிப்பு பரிமாருகிறார்களே , ஏன் என்று தெரியுமா ?

திங்க தான் ,..! பின்னே தலையில் தேய்த்துக்கொல்லவா வைப்பார்கள் ?
______________________________________

மனைவி யிடமும் காதலியிடமும் மறைக்க வேன்டியவைகள் எவை?

மனைவியிடம் காதலியையும் ,

காதலியிடம் மனைவியையும்

மறைக்க வேன்டும் ..
___________________________________________

கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார் , நம் குடிமக்களை பார்த்து பொறாமை கொன்டு , அப்படி என்ன தான் இருக்கு இந்த , TASMAC கடைக்குள் 'யென்ரு காண, உள்ளே சென்று ORDER செய்தார், 5 BEER முழுவதும் முடிந்தது, ஒரு வித்தியாசமும் தெரியாததல் தொட்ர்ந்தார், 2 FULL.. அப்பொழுதும் ஒன்னும் ஆகல..

மீன்டும் ஆறம்பிதார் , 2 BEER.. கடைகாரர்க்கு ஆச்ச்ரியம் தாளாமல் , கேடடார் .. "யார் யா நீ??

இவளவு சாபிட்டும் உனக்கு போதை எறல? மறுபடியும் கேட்குரே ? "

அதற்க்கு நம்ம கடவுள் " நான் தான் கடவுள் எனக்கு இந்த போதை ஒன்றும் செய்யாது" என்றார்.

கடைகாரர் : " தோ டா..! தொரைக்கு இப்ப தான் ஏர அரம்பிச்சி இருக்கு..! நடகட்டும்..!

நடகட்டும் ..!"

நுகர்வோர் நலன் (Consumer Care)


" நான் சும்மா விடுவேனா Consumer court- ல போட்டு இழுத்துற மாட்டேன் " அப்படினு நம்மள .. பல பெரு பேசுவொம் .. இப்ப அதுக்கு வேல குறைய போகுது ...

நுகர்வோர் நலன் கருதி Department of Consumer Affairs பின் வரும் இணைய தளத்தை எற்ப்படுத்தியுள்ளது .

Consumer Online Resources & Empowerment Centre (Core Centre)

இங்கு நுகர்வோர் நலன் பற்றிய அனைத்து தகவல்களும் கிடைக்கிறது . மேலும் இங்கு பதிவு செய்யப்படும் நுகர்வோர் பிரச்சனைகளுக்கு மிகவும் முக்கியதுவம் தரப்படுகிறது .

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



இந்த புத்தாண்டு 2007 ' உங்களுக்கு எல்லா வளமும், நலமும்.. கிடைக்க, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

About me

  • I'm சுந்தர் / Sundar
  • From chennai, tamilnadu, India
  • பெருசா சொல்றதுக்கு ஒனும் இல்ல Nothing Spl to tell
My profile

வேலைவாய்ப்பு கல்வி