கண்ணிர் அஞ்சலி .
தமிழ் மக்களையும், தமிழீழ மண்ணையும் ஆழமாக நேசித்து, கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இதயத்தில் விடுதலைக் கனலை சுமந்து இறுதிவரை ஓயாது உழைத்த, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான மதிப்புக்குரிய கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், டிசம்பர் 14 2006 காலமாகியுள்ளார்.
தமிழினத்தின் அடிநாதமாக, தமிழீழ தேசியத் தலைவரின் குரலாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூச்சாக நின்ற, மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், இன்று எம்மை விட்டு பிரிந்து விட்டார். டிசம்பர் 14 2006, பிற்பகல் 1:45 மணிக்கு, மதியுரைஞரின் உயிர் மண்ணுலகில் இருந்து பிரிந்தது.
தனது சொல் வன்மையாலும், ராஜதந்திர மதியூகத்தாலும், அணையாத விடுதலை வேட்கையாலும், தமிழீழ மக்களையும், உலகத் தமிழர்களையும், ஆட்கொண்ட மதியுரைஞர், இன்று எம்மைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். எல்லோரது இதயத்திலும் இடியாக விழுந்துள்ள மதியுரைஞரின் பிரிவால் தமிழினம் துடித்து நிற்கின்றது.
சத்தியத்தை சாட்சியாக வரித்து, தணியாத விடுதலை வேட்கையுடன் வாழ்ந்து, வீறுகொண்ட விடுதலைப் போராட்டத்தை அடிநாதமாகக் கொண்டு, தமிழ் மக்களை ஆழமாக நேசித்து, தமிழீழத்தின் ராஜகுருவாக திகழ்ந்த மதியுரைஞரைப் பிரிந்து, தமிழினம் ஆற்றுப்படுத்த முடியாத துயரில் மூழ்கியுள்ளது. உயரிய சத்தியத்திற்காக வாழ்ந்து, விடுதலைக்கு விதையாகி வீழ்ந்த மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், என்றென்றும் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் நிலைத்து நிற்பார்.
அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு ''தேசத்தின் குரல்'' எனும் கெளரபட்டம் -- தமிழீழ விடுதலைப் புலிகள்
-- செய்தி , http://www.pathivu.com/- லிருந்து எடுக்கபட்டது
அன்ரன் பாலசிங்கம் (1938-டிசம்பர் 14, 2006)