யார் அந்த தாத்தா..!
அதாங்க School - ல படிக்கும் பொது டிசம்பர் மாச கடைசியா பாத்து ஒரு குண்டு பையனுக்கு சிவப்பு கலர் பெரிய சட்டை பொட்டு , அதுக்குள்ள ஒரு தளவானி வச்சு ... பஞ்சுல .. தாடி வச்சு ... அவன் முடிய வெள்ளை ஆக்கி , அஞ்சு பைசா மிட்டாயா தூக்கி விசிக்கிட்டே .. நடந்து போவாரே ... அவர்தாங்க ...
என்க்கு ஏன் அவர் மேல இவ்வளவு ஆசை ..என்னா ஒரு தடவ லக்கி டிப்புல (லக்கிலூக் இல்லங்க )கிலுகிலுப்பை இனாமா கொடுத்தாரு ... அதனாலயும்தான் .
அவரு நல்லவரு, வல்லவரு , நாளும் தெரிஞ்வரு , அப்படினு அள்ளி விடாம .. உண்மைய எழுதலாமே இனையதில் தேடினா.... அவர பத்தி பல கதைகள் இருக்கு .. உங்களுக்கு வேற வழியே இல்ல.. நான் சொல்ல போற கதையையும் கேளுங்க ...
தமிழில் செல்லமாக " கிறிஸ்துமஸ் தாத்தா " என்று அழைக்கபடும் சான்டா கிளாஸ், அந்த வருடத்தில் நல்ல பிள்ளைகளாக இருந்த குழந்தைகளுக்கு அன்பளிப்பை வருட கடைசியில், (அதாவது கிறிஸ்துமஸ் இரவு) வழங்குவதை தொழிலாக கொண்டவர்.
சான்டா கிளாஸ் என்ற பெயர் அமெரிக்கர்கள் தப்பாக உச்சரித்த சின்டர்கிளாஸ் என்ற டச்சு வார்த்தையிலிருந்து வந்தது, சின்டர்கிளாஸ் என்ற பெயரும் செயின்ட் நிக்கொலாஸ் என்பவரின் பெயரின் சுருக்கமே. செயின்ட் நிக்கொலாஸ் ஆசியா மினார்( தற்போதய துருக்கியின் ஒரு பகுதி) - ல் பிறந்தவர். தனது 19 ம் வயதில் கத்தொலிக்க பாதிரியார் ஆனார் . பின்னர் பிசப்பாகவும் பணி செயதார். இவர் தனது சொத்துகள் அனைத்தையும் ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்து அளித்துள்ளார் .
வரலாறு அவரது நினைவாக செயின்ட் நிக்கொலாஸ் நாள் என்ற ஒரு தினத்தை டிசம்பர் 6 ஆம் தேதி கொண்டாடினார்கள்.அந்த தினத்தில் அன்பளிப்பை பகிர்ந்து மகிழ்ந்தனர் மக்கள்.நாளடைவில் இந்த அன்பளிப்பு பகிர்வு கிறிஸ்மத்தொடு இனைந்தது கொண்டது.
சான்டா கிளாஸ் பாரம்பரியாமாக , சிவப்பு நிற ஆடையும் , வெண்னிற தாடியும் ,தொந்தியும் தொப்பையுமா காட்சி அளிப்பார் . அவர் அன்பளிப்பு பொட்டலங்களையும் சுமந்து கொண்டெ எங்கும் செல்வார் .
அவருடைய உருவ அமைப்பை பல கம்பெனிகளும் தங்கள் விளம்பரங்களில் பயன்படுத்துகின்றனர்.
இப்படி பல கதைகள் அவர் பெயரில் இருந்தாலும், அவர் நினைவுபடுத்துவது " பகுத்துன்டு பல் உயிர் ஒம்புதல் " தான் .
அப்படியே , என்னுடைய " இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை " உங்கள் எல்லோருக்கும் சொல்லி தற்போதைக்கு விடை பெறுகிறேன்.
உங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
எழுதியவர்: Shruthi | 3:44 PM
உங்களுக்கும் கிறித்துமஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் :-)
எழுதியவர்: Syam | 8:52 PM
நல்லா இருக்குங்க ! வாழ்த்துக்கள்
எழுதியவர்: Anonymous | 9:11 PM
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
எழுதியவர்: ஜி | 3:21 AM
வாங்க வாங்க ...Cake சாப்பிடிங்களா ... , எல்லாரும்தான்... சுருதி , ஸ்யாம், சேவியர், ஜி ...
நன்றி ... Spl வாழ்த்துக்கள்... உங்களுக்கு மட்டும் !
எழுதியவர்: சுந்தர் / Sundar | 9:36 AM
உங்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சுந்தர்!!
எழுதியவர்: கதிர் | 12:07 PM
புத்தாண்டு & நத்தார் தின வாழ்த்துகள்.
எழுதியவர்: Boston Bala | 10:03 AM
வாங்க தம்பி..,
வாங்க Boston bala.. வருகைக்கு நன்றி ...
உங்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள் ..
சரி .. பாலா .... அது என்னது " நத்தார் தின வாழ்த்துகள் " ?
எழுதியவர்: சுந்தர் / Sundar | 4:45 PM
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் சுந்தர்!
எழுதியவர்: Divya | 2:35 AM