« முகப்பு | யார் அந்த தாத்தா..! அதாங்க School - ல படிக்கும் பொ... » | கண்ணிர் அஞ்சலி .அன்ரன் பாலசிங்கம் (1938-டிசம்பர் 1... » | நல்ல அட்வடைஸ்மென்ட் .நல்ல அட்வடைஸ்மென்ட் பார்க்கும... » | இன்று..நேத்து ... நைட்டு சினிமாவுக்கு போனதுனால... ... » | நிலமெல்லாம் ரத்தம் எவ்வளவு பெரிய Advocate-டா இருந்... » | வெங்காயம்முனா .... சும்மாவா..ஒரு ஊருள, ஒரு வெங்காய... » | கேட்ட வார்த்த கேட்கும் பொது நினைவுக்கு வருவதுஇனிய ... » | தோல்வி நெரும் போது இத சொல்லி பாத்துகுவென்..தேடிச் ... » | இத கேளுங்க முதல ... சும்மா சுப்பறா இருக்கு » | அப்பாட..ஓரு வழியா என் பதிவு ஆரம்பம் . (09 Nov 06 ) »

பழசு கண்ணா பழசு !!


ஒரு சின்ன வேல காரணமா ... நான் இன்னக்கி DPI போயிருந்தேன் ... அப்படி அங்க சுத்திகிட்டு இருந்தப்போ .. " மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டி " ( Madras Literary Society )போர்டு
பாத்து அசந்துட்டேன் . என்னாடா ஒரு போர்ட பாத்துட்டு அசந்துடானேனு நீங்க நினைக்க கூடாது . நான் அசந்தது அந்த போர்டு ஒரத்துல கொஞ்சம் சின்னதா Est 1812 ! அப்படிங்கிறத பாத்து . ஆஹா ... பழசு.. பாத்துரவேண்டியதுதான் அப்படினு உள்ளே நுழைந்தேன் .
பழங்காழத்து கட்டிடம் ... அங்கங்க விரிசல் . என்னை வரவேற்றது பார்வையாளர்களின் வருகை பதிவேடு .

என்னோட ஆட்டோகிராப்பை போட்டுட்டு . உள்ளே சென்று ஒரு அகல பார்வை பார்த்தேன் ,பெரிய , மிக பெரிய ஒரு ஸ்டீல் ராக் (Steel Rack) முழவதுமாக ... தூசி படிந்த புத்தகங்கள் . ஸ்டீல் ராக்கின் ( Steel Rack) உயரம் சுமார் 30 அடிக்கு மேல். அதுல ரெண்டு மாடி இருக்கு , மாடி எறுவதற்கென்றெ ஒரு ஏணி , அதில் ஏரி புத்தகம் தேடுவதற்கென்றே உள்ளது , நான் அது மாதிரி ஒரு செட்டப்ப ... சினிமாவில் மட்டுமே பார்த்து இருக்கிறேன் . இது இல்லாம ஒரு 30க்கும் மேலான ஆலமாரிகளில் புத்தகங்கள் . சரி மேட்டருக்கு வருவோம் ..

" மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டி " 1812 ஆம் வருஷம் சர் ஜான் நியுபோல்டு மற்றும் பாபிங்டன் அவர்களால் நிறுவப்பட்டது . இது ஆசியாடிக் சொசைட்டி ஆப் கல்கத்தா (ஏச்ட் 1784 ) வின் வழித் தொன்றலாகவும் பார்க்கபடுகிறது .இங்கு 80,000 புத்தகங்கள் உள்ளனவாம் .
17 ஆம் , 18 ஆம் , 19 ஆம் நுற்றாண்டு பழைமை வாய்ந்த புத்தகங்கள் கானக் கிடக்கிறது . அவைகளின் பக்கங்கள் மடித்தால் உடைந்து விடுகின்றன . பல என்சைக்குலொபிடியா பார்தேன் ... அதுல இருக்குற ஆங்கிலத்த ... எழுத்து கூட்டி படிச்சா கூட என்க்கு புரியல ... அவ்வளவு பழசு .இங்கு இருக்கும் புத்தகங்கள் , இலக்கியம் , கலை , வரலாறு , தத்துவவியல் ,மற்றும் புவி இயல் சார்ந்தவைகள் .

என் கண்ணுக்கு தெரிந்த பழைய வாசிக்க முடிந்த புத்தகங்கள்

1. The encylopedia of jewish
2. An epic of America
3. Imperail gazztee of india - 1908
4. Bengal Civilization

இதல்லாம .. பல பழங்காலத்து படங்கள், நாட்டின் வரைபடங்கள், சர்வே புத்தகங்கள் நிறையவே தென்படுகின்றன.
மிகவும் பழமை வாய்ந்த, முக்கியமான புத்தகங்களை அவர்கள் ஃபிரிஸ்சர்வு செய்கின்றனர் ( Restoring the oldest books thru new preservation methods )

மிகவும் பழமை வாய்ந்த புத்தகம்
1. Arretolis Opera Omania QVAE Extant Graece and Latine - 1619
2. A history of Buckingham canal Project .

இங்கு , ஆங்கிலம் , கிரேக்கம் , லத்தின் , சான்ஸ்கிரிட் , அரபிக் , திபெதியன் , ஆகிய மொழி புத்தகங்கள் உள்ளன. தமிழ் புத்தகத்தை தேடி இங்கு செல்ல வேண்டாம் , என்னா ...அங்க அது இல்ல..

இங்கு நிங்களும் உறுப்பினர் ஆகலாம் , ருபாய் 500 /- மட்டுமே.
The Madras Literary Society College Rd ,
Nungambakkam Chennai -6 ( Inside DPI campass )

DPI? எங்கே இருக்கிறது?

இன்னும் சென்னை இலக்கிய குழு என்று பெயர் மாற்றவில்லையா ; )

This comment has been removed by the author.

வாங்க பாலா !
Director of Public Instruction (DPI)
- next to Womens christian College
- opposite to Sankara Nethralaya Eye Hospital
பஸ் - 27H , 17D
பெயர் இன்னும் மாற்றப்படவில்லை ! ஆச்சரியம்
தமிழ்நாடு அரசு இதற்கு ஃப்ண்டு செய்வதில்லை . ஓரு தனி committee இதனை நடத்துகிறது

Post a Comment

About me

  • I'm சுந்தர் / Sundar
  • From chennai, tamilnadu, India
  • பெருசா சொல்றதுக்கு ஒனும் இல்ல Nothing Spl to tell
My profile

வேலைவாய்ப்பு கல்வி