வெள்ளி, நவம்பர் 26, 2010


மழை பாட்டு


மழை வருது ...மழை வருது ...
நெல் அள்ளுங்க ...
முக்கா படி அரிசி பொட்டு ...
முறுக்கு சுடுங்க.....
ஏறு உழுத .... மாமனுக்கு ...
எண்னி வையுங்க.....
சும்மா இருந்த .... மாமனுக்கு ..
சூடு போடுங்க....

வியாழன், ஜனவரி 03, 2008



என்றும் அன்புடன் ...

குழந்தைகள் வேண்டுதல் என்றுமே மாறுபட்ததாய் இருக்கும் .
என் மனதை தொட்ட ஒரு குழந்தையின் வேண்டுதல் ... இங்கே ..விடியோ பதிவில்.


அமைதி பரவட்டும் .... இந்த புவி எங்கும் ..
இந்த புத்தாண்டு அமைதியின் ஆண்டாக ...அமையட்டும் !.

புதன், ஜனவரி 02, 2008

புத்தாண்டு - 2008

புது பொலிவு
புது தெளிவு
புது கனிவு
புது கனவு..

அந்த கனவுகள் இந்த ஆண்டே நினைவுகளாகட்டும் .
புதுமையான எண்ணங்கள் ஆக்கங்கள் ஆகட்டும் .

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புதன், செப்டம்பர் 12, 2007


உற்சாகம் ! ஒரே சோகம்



ஒரு அதிரடியான ஹீரோ , அவரு காதலிக்க ஒரு பொண்னு ( கொஞ்சம் அழகா ) , ஆனா அந்த பொண்னு இவர friend னு நினைக்குது( என்ன கொடுமை சார் ) . நம்ம ஹீரோ friend ஆயிடதுனால காதலை சொல்ல மறுக்கிறார் ( இவனெல்லாம் ஹீரோ , ரொம்ப வெடிபயல் கதை படிக்கிற ஹீரோனு நினைக்கிறேன் ).
ஹீரோயின் வேறு ஒரு சைக்கோவுக்கு மண ஒப்பந்தம் ஆகிறார் , ஒரு சில கொடுமைகளை கல்யாணத்துக்கு முன்பே அனுபவிக்கிறார் . அந்த சைகோவிடம் இருந்து மணப்பெண் எப்படி தப்பித்து , ஹீரோவை கைபிடிக்கிறார் என்பது கதையாம்.

அதாங்க நேத்து உற்சாகம் படம் பார்த்தேன். ஏண்டா படத்துக்கு போனோம்முனு ஆயிடுச்சு .
அந்த படத்தோட இயக்குனர் ரொம்ம காலம சினிமாவே பார்த்திருக்க மாட்டருனு நினைக்கிறேன் . 1980 களில் வந்த படங்களின் கதைய .. 2007 ல சொதப்புனவரு இவருதான் !
பாடல்களுக்கும் கதைக்கும் சொந்தம் இல்லை !
காமடிக்கும் படத்துக்கும் வெகுதூரம் !
ஒளிப்பதிவாளர் - பிழைத்துக்கொள்வார் !
உற்சாகம் - வரவில்லை !

வியாழன், ஆகஸ்ட் 02, 2007


பேசும் போது ...
மகிழ்ச்சி பொங்கு..தே...!
பொழியுது பொழியுது ..
எங்கும் வண்ண மழையே ...

பொழியுது .. பொழியுது ..
வண்ணம் ... பொழியுது ...

பொழியுது பொழியுது ..
எங்கும் வண்ண மழையே ...


பேசும் போது ...
மகிழ்ச்சி பொங்கு..தே...!


இது ரீலையன்ஸ் கலர் போன் விளம்பரம் , தமிழ் வார்தைகளை போட்டு பாடி பாத்துக்கோங்க. எனக்கு ரொம்ப பிடிச்ச Ad.

புதன், ஜூலை 18, 2007

இதுவும் கடந்து போவும் !


ஒரு ஊருல ...ஒரு ராஜா இருந்தாரு ... அவருடை நாடு நல்ல சுபிச்சமா இருந்தது , மக்களும் மன்னரும் ... மகிழ்ச்சி கடலில் திளைத்திருந்த காலம் அது . ஒரு நாள் அந்த மன்னர் மகிழ்ச்சியை கொண்டாட வேண்டி நாடு முழுவதும் திருவிழா கோலம் காணச் செய்திருந்தார் . நாட்டில் எங்கு பார்த்தாலும் ஆட்டமும்.. பாட்டமும்... கொண்டாட்டமா இருந்தது . மன்னரை பாராட்டி, மகிழ்விக்க புலவர்களும் , அறிஞறர்களும் கூடி இருந்தனர் . அந்த வேளையில் , அந்த நாட்டிற்கு வந்திருந்த துறவியும் அந்த அரங்கத்திற்கு அழைக்கபட்டிருந்தார் .

எல்லா புலவர்களும் , அறிஞர்களும் அவர்கள் சொல் திறமைக்கு ஏற்ப , மன்னரையும் , மக்களையும் , நாட்டு வளத்தையும் பாராட்டி பேசினார்கள் . அந்த துறவியின் முறை வந்த போது .. அவரும் பேசினார் .. முடிவில் " இதுவும் கடந்து போவும் " என்று சொல்லி தனது உரையை முடித்தார் . சிலருக்கு புரிந்தும் .. பலருக்கு புரியாமலும் அந்த துறவியின் பேச்சு இருந்தது , மன்னருக்கும் அப்படியே !


நாட்கள் நகர்ந்தன .. மாதங்கள் உருண்டன ... திடீர் என்று ஒரு நாள் .. பக்கத்து நாட்டு மன்னன் இவர்கள் நாட்டின் மீது படை எடுத்தான் .. போர் சில நாட்கள் தான் , எல்லா வளமும் பொருந்திய இந்த நாட்டு மக்களும் , மன்னரும் தோல்வி அடைந்தனர் .

மன்னர் தலைமறைவாக காடுகளில் தனது தளபதிகளுடன் கொஞ்ச நாட்கள் இருந்தார் . பல நாட்கள் தளபதிகளுடன் விவாதித்த பிறகு , ஒரு சிறு படையை திரட்டி போரிடுவது என்று முடிவு செய்தார் . அனறு மாலை மன்னர் எதர்ச்சையாக அந்த துறவியை பார்க்க நேர்ந்தது . சில மணி துளிகள் அவருடன் மன்னர் பேசினார் .. பின்னர் துறவி விடைபெறும் போழுது " இதுவும் கடந்து போவும் " என்று சொல்லி விடை பெற்றார் . இப்போழுது மன்னருக்கு அதன் அர்த்தம் கொஞ்சம் புரிந்திருந்தது .

கொஞ்ச நாட்களில் ஒரு சிறு படை ஒன்று காடுகளில் வாழ்ந்த பழங்குடி மக்களின் துணையோடு தயாரானது . அவர்கள் மீண்டும் போரிட்டு தங்கள் நாட்டை வென்றனர் . மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். மன்னருக்கு பக்கத்து நாட்டு மன்னர்களும் , பிரபுக்களும் வாழ்த்து செய்திகளை அனுப்பி இருந்தனர். பல வாழ்த்து மடல்களுக்கிடையில் ஒரு வாழ்த்து மடலில் " இதுவும் கடந்து போவும் " என்று எழுதியிருந்தது .

எனக்கு இந்த கதை ஞாபகம் வர காரணமாய் இருந்த வரிகளும் இங்கே .

Everything in life is temporary.
Darkness of the night ;or a bright day .
Even sunrise is temporary;so is sunset.
So if things are going good, enjoy it because it won't last forever.
And if things are going bad, don't worry.
Because it won't last forever either.
Everything passes by.

புதன், ஜூன் 27, 2007

என் In-Box-ல் !


DEO வாராருனு ..
நோட்டு ,புத்தகத்துக்கு புது சட்டையாம் !
நோட்டீஸ் போர்டு பளபளக்குது !
வாத்தியாரு புது வேஷ்டியில் !
சத்துணவில் ரெண்டு கூட்டு !
ஆறுமுகத்து வீட்டிலிருந்து மல்லாட்ட ..DEO க்கு!
சண்முகத்து வீட்டிலிருந்து முந்திரி ..DEO க்கு!
ஸ்டாப் ரூமில் .. பிரியாணி..

பரபரப்பா இருக்குது பள்ளிகூடம் ..

இருந்தும் என் post box..ல லெட்டர் போடுரானுங்க ..
DEO வந்தா என்ன .. வராட்டி என்ன ..
என் கிளிஞ்ச டவுசருக்கு மவுசு கொறையல ..


பின் குறிப்பு:எழுத காரணமாய் இருந்தவர் "என்னா லுக்கு??".
சிநேகிதனுக்கு நன்றி.

-mp சுந்தர்

About me

  • I'm சுந்தர் / Sundar
  • From chennai, tamilnadu, India
  • பெருசா சொல்றதுக்கு ஒனும் இல்ல Nothing Spl to tell
My profile

வேலைவாய்ப்பு கல்வி