
ஆச்சரியங்கள்! ( !? )
சுற்றும் பூமி
சுடும் சூரியன்
சில்லென்ற காற்று
சிக்காத மேகம்
புரிந்த அறிவியல்
புரியாத இறையியல்
தெரிந்த விஞ்ஞானம்
தெரியாத வியாக்கியானம்
மறந்த மனிதர்கள்
மறைக்கின்ற விசயங்கள்
தொலைத்த தருணங்கள்
தொல்லை தரும் தருணங்கள்
அழைக்கின்ற வாழ்க்கை
அழைக்காத காதல்
சுடும் காமம்
சுடாத காதல்
தெளிந்த நீரோடை
தெளியாத மனம்
கவிதை மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. தொலைத்த தருணங்கள் என்ற வார்த்தையில் தொலைந்து போனேன்.
எழுதியவர்:
☼ வெயிலான் |
7:14 PM
நல்ல கவிதை....
எழுதியவர்:
Shruthi |
2:19 AM
வாங்க வெயிலான் ,
//தொலைத்த தருணங்கள் என்ற வார்த்தையில் தொலைந்து போனேன்.
//
தொலைந்து போக செய்ததா ? எனக்கே ஆச்சரியம்தான் .
எழுதியவர்:
சுந்தர் / Sundar |
12:09 PM
நன்றி ஸ்ருதி.
எழுதியவர்:
சுந்தர் / Sundar |
12:09 PM
Printha Vingnanam (science) and puriyatha irai iyal -
kum.... entume puriyaatha puthithaan IRAI IYAL - illaiya nanbare
எழுதியவர்:
Anonymous |
4:04 PM
//Anonymous said... தமிழில் ..
புரிந்த விஞ்ஞானம் (science) மற்றும் புரியாத இறையியல் -- கும் என்றுமே புரியாதா புதிர்தான் இறையியல் -- இல்லையா நண்பரே ! //
பி.கு : நான் புரிந்து கொள்தற்காகவும் , நான் புரிந்து கொண்டது சரியா, என்று அனானி தெரிந்து கொள்ளவும் .
நான் புரிந்து கொண்டவரை .. நான் உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன் !
அனானி , இதில் தவறு இருந்தால் சொல்லவும் .
எழுதியவர்:
சுந்தர் / Sundar |
9:44 AM