« முகப்பு | இது சுட்டதுங்கொ.......சுட்டிப்பைய்யன் : சார் , என்... » | நுகர்வோர் நலன் (Consumer Care)" நான் சும்மா விடுவே... » | இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு ... » | பழசு கண்ணா பழசு !!ஒரு சின்ன வேல காரணமா ... நான் இன... » | யார் அந்த தாத்தா..! அதாங்க School - ல படிக்கும் பொ... » | கண்ணிர் அஞ்சலி .அன்ரன் பாலசிங்கம் (1938-டிசம்பர் 1... » | நல்ல அட்வடைஸ்மென்ட் .நல்ல அட்வடைஸ்மென்ட் பார்க்கும... » | இன்று..நேத்து ... நைட்டு சினிமாவுக்கு போனதுனால... ... » | நிலமெல்லாம் ரத்தம் எவ்வளவு பெரிய Advocate-டா இருந்... » | வெங்காயம்முனா .... சும்மாவா..ஒரு ஊருள, ஒரு வெங்காய... »

Alt + Ctrl + Del 'ஆகாஷ்'

======= முகில் ========


1998

'சுளையா ..சுளை சுளையா செமஸ்டருக்கு செமஸ்டர் முப்பதயிரம் ரூவா கட்டிருக்குல்லே .. எப்படியாவது அரியர்சையெல்லாம் க்ளியர் பண்ணிருலே 'ன்னு உள்மனசு கிடந்து குய்யோ முய்யோன்னு கதறுது ! இப்பதான் B.Sc Maths முடிச்சு MCA சேந்தாபுபல இருக்குது ஆனா வெட்டியா விமலாகிட்ட கடலை போட்டதுலயே ரெண்டரை வருசம் ஓடிப்போச்சு.

மவனே இதுவரைக்கும் அஞ்சு அரியர்ஸ் வைச்சிருக்க . இந்த அஞ்சாவது செமஸ்டர்லயும் எண்ணிக்கைக் கூட்டிராத, நெஞ்சு தாங்கது நாளைக்கு Oracle பேப்பர் இருக்குடா , படிடா .. படிடா .. அய்யோ இன்னக்குன்னு பாத்து மேட்ச் நடக்குதே . ஒரு ரெண்டு நிமிசத்துக்கு டிவிய போடலமா ..

1999

என்னாடா இது நமக்கு மேல ஃப்ராடா இருக்கு .. பைனல் செமஸ்டர் ஏதாவது ப்ராஜெக்ட் தேடலாம்னு சென்னைக்கு கிளம்பி வந்தேன். பெரிய கம்பெனிக்காரங்க எல்லாம் " நோ என்ட்ரி"ன்னு தொரத்துரான். சரி, ஏதாவது சின்ன கம்பெனில பட்டறையைப் போடலாமுன்னு இங்க வந்தென். இனிக்க இனிக்க பேசி பத்தாயிரம் கொடுன்னு பதிவுசா கேட்டான் . சரி , இப்பவாவது ஏதாவது கத்துகலாமேன்னு சொல்லி நானும் கொடுத்தேன். வாரம் ஒரு மணி நேரம் கம்ப்யூட்டர்ல சீட்டு விளையாண்டுகிட்டு உட்கார்ந்தேன்.

ரெண்டு மாசம் முடிஞ்சே போச்சு. இன்னிக்கு மூஞ்சிக்கு முன்னாடி, 'ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் ' , லைப்பரரி மேனேஜ்மென்ட் ', பில்லிங் மேனேஜ்மென்ட் 'னு முணு சர்ட்டிபிகேட்டை துக்கிப் போட்டு , 'உன் ப்ராஜெக்ட் முடிஞ்சது .இதுதான் சர்ட்டிபிகேட் .எது வேணுமோ எடுத்துக்கோ'ன்னு சொல்லுரான். ப்ராஜெக்ட் வைவா-ல எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியயே?

2000

வேலை தேடப் போறேன்னு சென்னைக்கு வந்து கொடி நாட்டியாச்சு, முணு மாசமாச்சு. வீட்டுல இருந்து வர்றா பணத்துல, பக்கத்துல இருக்கு மெஸ் புண்ணியத்துல வாழ்க்கை சுமுகமா ஒடிக்கிட்டிருக்கு. எதாவது கம்பெனில இன்டர்வியுக்குன்னு போனா , முத ரவுண்டுலயே நம்ம முகமூடிய டார்டாரா கிழிஞ்சுடுது. VB , Oracle, C++ .. இதெல்லாம் படிச்சிருக்கேன்னு சொல்லி வெளிய தல காட்ட முடியல. எவனாவது ஒருத்தன் VB கத்துக்குறதுக்குன்னு சம்பளம் இல்லாம வேல கொடுத்தாக் கூட சேந்துரலாம். அவனாவன் கேக்குற கேள்வியை பார்த்தா, ஜப்பான்காரன் பாஷை மாதிரி புரியவே மாட்டேங்குது

இப்படியே போய்க்கிட்டிருந்தா சென்னைல நீ கிழிச்சது போதும் , ஊரு பக்கமா வாந்து நம்ம கடையிலேயே உக்காருன்னு உத்தரவு போட்டுருவாங்க. இப்பொதைக்கு பிஸினஸ்ன்னு குவாலிபிகேஷனை காட்டி , ஏதாவது டேட்டா என்ட்ரி வேலைக்கு போகலாம் . மாசம் ரெண்டாயிரம் ரூவா கிடைக்கும்

2001

அரியர்ஸ் கணக்கை பைசல் பண்ணியாச்சு. ஆகாஷ் MCA வருங்காலத்துல என் கல்யாணப் பத்திரிக்கைல வக்கனையாப் போட்டுக்கலாம். கூடிய சிக்கீரம் இந்த எலவு டேட்டா என்ட்ரியை விட்டு வெளிய வரணும். விட்டா, இதுலயே சிக்கிச் சீரழிஞ்சு முன்னேறிறுவேனான்னு பயமா இருக்கு.

பீல்டு மாறனும் . ஆங் .. அது என்ன .. Oracle .. Oracle .. ஆதுல அட்வான்ஸ் கோர்ஸ் ஏதாவது சேர்ந்து, அதையாவது ஒழுங்கா படிச்சு , நல்ல வேலைக்கு போகனும் . கூட படிச்சவனெல்லாம் பத்தாயிரம் , பதினைஞ்சாயிரம் சம்பாதிக்கிறேன்னு மெயில் வழியா வயிறெரிய வைக்குறானுங்க. விமலாக்கு வேற கல்யாணம் ஆயிருச்சு. அடுத்த வாரம் புருஷனோட USA போறாளாம். டேய் ஆகாஷ் இன்னும் boot ஆகாத சிஸ்டமாவே இருக்க ?

2002

'டேட்டாவோர்ல்ட் கம்பெனில சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டரா ஒரு வருஷம் , ஜே&ஜே பிரைவேட் லிமிடெட்ல ப்ரோகிராமரா ஒன்றரை வருஷம், அப்புறம் அது என்ன , ஆங் ஸ்வஸ்திக் சாஃப்ட்வேர்ஸ்ல ஆரக்கிள் ப்ரோகிராமரா கடந்த ரெண்டு வருசமா வேலை பத்துக்கிட்டிருக்கேன். இப்போ நான் வாங்குற சம்பளம் எட்டாயிரம் ' இந்த டயலாக்கை நியாபகப்படுத்தி சொல்லி பார்த்துக்குவேன் . ஏன்னா அப்படித்தான் என்னோட ரெஸ்யூம்ல போட்டிருக்கேன்.

ஆமாங்க .. Fake-தான். 100% சுத்தமான பொய்களால் நிரப்பப்பட்ட ரெஸ்யூம்தான். 'Fake போட்டு வாழ்வாரே வாழ்வார் - மற்றோரெல்லாம் பிழைக்க தெரியாதாவர்'ன்னு வள்ளுவரே சொல்லி யிருக்காரெ!. இதே Fake ரெஸ்யூமோட கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கிட்டிருக்கேன். எதாவது கன்டிஷனைச் சொல்லி, Query எழுதச் சொல்லுறான். Worry ஆகிப் போகுது. எப்படி ஒரு டேட்டா பேஸை Backup எடுப்பேன்னு கேக்குறான் அதுல நான் Packup ஆயிடுறேன். பிள்ளையாரே, எனக்கு மட்டும் ஒரு வேலை கிடைச்சுட்டா, 1008 Oracle Query எழுதி உனக்கு மாலையாப் போடுறேன்.

2003

டேய் ஆகாஷ் .. உன்னை நல்லவன்னு நம்பி ஒருத்தன் வேலை கொடுத்துட்டான்டா! சம்பளம் வேற 15000னு சொல்லிட்டான். ஜாய்ன் பண்ணி ஒரு வாரமாச்சு. என்னை எந்த ப்ராஜெக்ட்ல போடப் போறான்ங்கன்னு தெரியல, ஏதோ சமாளிக்கிற அளவுக்கு Oracle தெரியும் , எடக்குமக்கா எதாவது வேலை கொடுத்து, கோக்குமாக்க நான் முழுச்சி, இவன் Fake- தான்னு கண்டுபிடிச்சிருவாங்களோன்னு அடிவயிறு ரிமைண்டர் வைச்சு அரை மணி நேரததுக்கு ஒருமுறை கலங்கிக்கிட்டே இருக்கு.

இவ்வளவு நாள், மாசம் ரெண்டாயிரத்தை வைச்சே இன்பமா வாழ்ந்துட்டேன். இனிமே மாசம் 15000 ரூவா வரப் போகுதே .. அவ்வளவு பணத்தை எப்படிச் செலவழிக்க? பீட்ச்சா, பீட்டர் இங்கிலான்ட், கிரெடிட் கார்டு, டிஸ்கோதேன்னு உன் வாழ்க்கையே மாறப் போகுதுடா மச்சான்!

2004

கொய்யால .. பதினைஞ்சாயிரம் சம்பளம் கொடுத்துட்டு, முப்பதாயிரத்துக்கு வேலை வாங்குறானுங்க. கடைசியா என்னிக்கு வீட்டுக்குப் போனேன்னு மறந்து போச்சு. தீபாவளிக்கு லீவு தர மாட்டேனுட்டானுங்க.கேட்டா, அமெரிக்கன் க்ளையண்ட். தீபாவாளி அன்னைக்கி முக்கியமான call வரும். இருந்தே ஆகணுங்கிறாரு என்னோட ப்ராஜெக்ட் மேனேஜர். நான் எப்படியோ போராடி ஒருநாள் லீவு வாங்கி, ஊருக்குக் கிளம்பிட்டேன்.

பஸ, டிரெயினு எதுலயும் டிக்கெட் இல்லாம கஷ்டப்பட்டு ஒரு டப்பா பஸ புடிச்சு ஊர் பக்கத்துல போறேன். கம்பெனில இருந்து போன் வருது. 'ஆகாஷ், உடனே கிளம்பி வாங்க. கோடிங்ல நிறைய Bug இருக்கு'ன்னு ப்ராஜெக்ட் மேனேஜர் மிரட்டுறாரு.'சார் இப்பத்தான் ஊருக்குள்ளேயே போகப் போறேன்'ன்னு பரிதாபமா சொல்லுறேன். . 'நோ ப்ராப்ளம் . அடுத்த பஸ்ஸை பிடிச்சு வந்திருங்க'ன்னு கூலா சொல்லுறாரு. ம்கூம் ..இது தாங்காது கம்பெனி மாறிட வேண்டியதுதான்.

2005

இந்த வடுசத்துலேயே ரெண்டாவது கம்பெனி மாறப்போறேன். நெட் சாலரி 4 லட்சம் தர்ரேன்னு சொல்லிருக்கான். லாப்டாப் தர்றதா சொல்லிருக்கான். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி 50 கிலோ இருந்த நான், இப்ப 80-ஐத் தொடப் போறேன். தொப்பையைக் குறைக்கனும். ஜிம் போகனும்.ஏன்னா வீட்டுல பொண்ணு பாக்குறாங்க.

2006
நான் இப்போ PM ஆகிட்டேன். அதான் ப்ராஜெக்ட் மேனேஜர். இப்ப கொஞ்ச பேரை இண்டர்வியூ எடுத்துக்கிட்டிருக்கேன்.

'பேரு என்ன, சுபாஷா .. ஓகே.. SQL -ல உங்க ஸ்ட்ரெங்த் என்ன? இப்ப எங்க வொர்க் பண்ணுறீங்க? Oracle ப்ரொகிராமரா எத்தனை வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் ? Ok we will call you later '

அந்த பையன் போயிட்டான் . முசப் புடிக்கிற நாய மூஞ்சிய பாத்தா தெரியாது! Fake ரெஸ்யூமை வெச்சிக்கிட்டு என்கிட்டயே டகால்டி வேலை காட்டுறான். அவனுக்கு இன்னும் இண்டர்வியூல நடிக்கத் தெரியல. போகப் போக கத்துக்குவான். நான் அவனை செலக்ட் பண்ணப் போறதில்லை . நாங்கள்ளாம் எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியும்ல ?

பின் குறிப்பு
எழுதியவர் : முகில் ( எனக்கு மின்னஞ்சலில் வந்துச்சு )
சுட்டது : சுந்தர் ( தட்டச்சு செய்தது நாந்தானுங்கொ )

enaku idhu erkenavey fwd mail a vandhadhu..great by the by idhu ungalodadha?

எழுதியவர் : முகில் ( எனக்கு மின்னஞ்சலில் வந்துச்சு )
சுட்டது : சுந்தர் ( தட்டச்சு செய்தது நாந்தானுங்கொ )

வாங்க கார்த்தி ...

எனக்கும் மின்னஞ்சலில் வந்துச்சு !

Post a Comment

About me

  • I'm சுந்தர் / Sundar
  • From chennai, tamilnadu, India
  • பெருசா சொல்றதுக்கு ஒனும் இல்ல Nothing Spl to tell
My profile

வேலைவாய்ப்பு கல்வி