புதன், ஜூன் 27, 2007

என் In-Box-ல் !


DEO வாராருனு ..
நோட்டு ,புத்தகத்துக்கு புது சட்டையாம் !
நோட்டீஸ் போர்டு பளபளக்குது !
வாத்தியாரு புது வேஷ்டியில் !
சத்துணவில் ரெண்டு கூட்டு !
ஆறுமுகத்து வீட்டிலிருந்து மல்லாட்ட ..DEO க்கு!
சண்முகத்து வீட்டிலிருந்து முந்திரி ..DEO க்கு!
ஸ்டாப் ரூமில் .. பிரியாணி..

பரபரப்பா இருக்குது பள்ளிகூடம் ..

இருந்தும் என் post box..ல லெட்டர் போடுரானுங்க ..
DEO வந்தா என்ன .. வராட்டி என்ன ..
என் கிளிஞ்ச டவுசருக்கு மவுசு கொறையல ..


பின் குறிப்பு:எழுத காரணமாய் இருந்தவர் "என்னா லுக்கு??".
சிநேகிதனுக்கு நன்றி.

-mp சுந்தர்

திங்கள், ஜூன் 11, 2007

பக்கத்தில் இருப்பவனின் வெற்றி !



ஒரு வித மகிழ்ச்சி
ஒரு வித கவலை
ஒரு வித கட்டாயம்
ஒரு வித கோபம்
ஒரு வித பொறாமை
ஒரு வித தற்காப்புயின்மை

இவையேல்லாம் ஒரு விதமாக இருக்க ,
ஆசை என்னவோ அந்த வெற்றியை நானும் பெற்று விட வேண்டும் என்றே நிர்பந்திக்கிறது !

About me

  • I'm சுந்தர் / Sundar
  • From chennai, tamilnadu, India
  • பெருசா சொல்றதுக்கு ஒனும் இல்ல Nothing Spl to tell
My profile

வேலைவாய்ப்பு கல்வி