ஒரு ஊருல ...ஒரு ராஜா இருந்தாரு ... அவருடை நாடு நல்ல சுபிச்சமா இருந்தது , மக்களும் மன்னரும் ... மகிழ்ச்சி கடலில் திளைத்திருந்த காலம் அது . ஒரு நாள் அந்த மன்னர் மகிழ்ச்சியை கொண்டாட வேண்டி நாடு முழுவதும் திருவிழா கோலம் காணச் செய்திருந்தார் . நாட்டில் எங்கு பார்த்தாலும் ஆட்டமும்.. பாட்டமும்... கொண்டாட்டமா இருந்தது . மன்னரை பாராட்டி, மகிழ்விக்க புலவர்களும் , அறிஞறர்களும் கூடி இருந்தனர் . அந்த வேளையில் , அந்த நாட்டிற்கு வந்திருந்த துறவியும் அந்த அரங்கத்திற்கு அழைக்கபட்டிருந்தார் .
எல்லா புலவர்களும் , அறிஞர்களும் அவர்கள் சொல் திறமைக்கு ஏற்ப , மன்னரையும் , மக்களையும் , நாட்டு வளத்தையும் பாராட்டி பேசினார்கள் . அந்த துறவியின் முறை வந்த போது .. அவரும் பேசினார் .. முடிவில் " இதுவும் கடந்து போவும் " என்று சொல்லி தனது உரையை முடித்தார் . சிலருக்கு புரிந்தும் .. பலருக்கு புரியாமலும் அந்த துறவியின் பேச்சு இருந்தது , மன்னருக்கும் அப்படியே !
நாட்கள் நகர்ந்தன .. மாதங்கள் உருண்டன ... திடீர் என்று ஒரு நாள் .. பக்கத்து நாட்டு மன்னன் இவர்கள் நாட்டின் மீது படை எடுத்தான் .. போர் சில நாட்கள் தான் , எல்லா வளமும் பொருந்திய இந்த நாட்டு மக்களும் , மன்னரும் தோல்வி அடைந்தனர் .
மன்னர் தலைமறைவாக காடுகளில் தனது தளபதிகளுடன் கொஞ்ச நாட்கள் இருந்தார் . பல நாட்கள் தளபதிகளுடன் விவாதித்த பிறகு , ஒரு சிறு படையை திரட்டி போரிடுவது என்று முடிவு செய்தார் . அனறு மாலை மன்னர் எதர்ச்சையாக அந்த துறவியை பார்க்க நேர்ந்தது . சில மணி துளிகள் அவருடன் மன்னர் பேசினார் .. பின்னர் துறவி விடைபெறும் போழுது " இதுவும் கடந்து போவும் " என்று சொல்லி விடை பெற்றார் . இப்போழுது மன்னருக்கு அதன் அர்த்தம் கொஞ்சம் புரிந்திருந்தது .
கொஞ்ச நாட்களில் ஒரு சிறு படை ஒன்று காடுகளில் வாழ்ந்த பழங்குடி மக்களின் துணையோடு தயாரானது . அவர்கள் மீண்டும் போரிட்டு தங்கள் நாட்டை வென்றனர் . மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். மன்னருக்கு பக்கத்து நாட்டு மன்னர்களும் , பிரபுக்களும் வாழ்த்து செய்திகளை அனுப்பி இருந்தனர். பல வாழ்த்து மடல்களுக்கிடையில் ஒரு வாழ்த்து மடலில் " இதுவும் கடந்து போவும் " என்று எழுதியிருந்தது .
எனக்கு இந்த கதை ஞாபகம் வர காரணமாய் இருந்த வரிகளும் இங்கே .
Everything in life is temporary.
Darkness of the night ;or a bright day .
Even sunrise is temporary;so is sunset.
So if things are going good, enjoy it because it won't last forever.
And if things are going bad, don't worry.
Because it won't last forever either.
Everything passes by.