
உணர்ந்துகொள் !
வெற்றிகள் உனக்கு
சிற்பங்களைப் பரிசளிக்கலாம்,
ஆனால்
தோல்விகள் மட்டுமே உனக்கு
உளிகள் வழங்கும்
என்பதை உணர்ந்துகொள்...
மழை, நதி, விதை
விழுவதால் எழுபவை இவை..
நீ மட்டும் ஏன்
விழுந்த இடத்திலேயே
உனக்கு கல்லறை கட்டுகிறாய்....
உன் சுவடுகள்
சிறைப்பிடிக்கப்படலாம்,
உன் பாதைகள்
திருடப்படலாம்,
பாதுகாத்துக்கொள்
உன் பாதங்களை...
உன் வழிகலெங்கும்
தூண்டில்கள் விழுந்திருக்கலாம்,
நீந்த முடியாதபடி
வலைகள் விரித்திருக்கலாம்.
தண்ணீராய் மாறித் தப்பித்துக் கொள்..
தங்க மீனாய்த்தான் இருப்பேன்...
என தர்க்கம் செய்யாதே....
நீ
வெற்றி பெற்றதாய் நினைக்கும்
பல இடங்களில்
தோல்விதான் அடைந்திருப்பாய்...
நீ
தோற்றுப் போனதாய்
நினைக்கும்
பல தருணங்களில்
வெற்றிதான் பெற்றிருப்பாய்...
உணர்ந்துகொள்
நீ தோல்வியுற்றது
வாழ்க்கையிலல்ல
வாழ்க்கையை புரிதலில்...
------------------------------------------------------
மேலிருப்பது சுட்டது !
என்னையும் சுட்டது .
உங்களையும் சுடட்டும்
என்பதற்காக இங்கே பதிந்தேன் !