பழசு கண்ணா பழசு !!
ஒரு சின்ன வேல காரணமா ... நான் இன்னக்கி DPI போயிருந்தேன் ... அப்படி அங்க சுத்திகிட்டு இருந்தப்போ .. " மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டி " ( Madras Literary Society )போர்டு

பழங்காழத்து கட்டிடம் ... அங்கங்க விரிசல் . என்னை வரவேற்றது பார்வையாளர்களின் வருகை பதிவேடு .

" மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டி " 1812 ஆம் வருஷம் சர் ஜான் நியுபோல்டு மற்றும் பாபிங்டன் அவர்களால் நிறுவப்பட்டது . இது ஆசியாடிக் சொசைட்டி ஆப் கல்கத்தா (ஏச்ட் 1784 ) வின் வழித் தொன்றலாகவும் பார்க்கபடுகிறது .இங்கு 80,000 புத்தகங்கள் உள்ளனவாம் .

என் கண்ணுக்கு தெரிந்த பழைய வாசிக்க முடிந்த புத்தகங்கள்
1. The encylopedia of jewish
2. An epic of America
3. Imperail gazztee of india - 1908
4. Bengal Civilization
இதல்லாம .. பல பழங்காலத்து படங்கள், நாட்டின் வரைபடங்கள், சர்வே புத்தகங்கள் நிறையவே தென்படுகின்றன.
மிகவும் பழமை வாய்ந்த, முக்கியமான புத்தகங்களை அவர்கள் ஃபிரிஸ்சர்வு செய்கின்றனர் ( Restoring the oldest books thru new preservation methods )
மிகவும் பழமை வாய்ந்த புத்தகம்
1. Arretolis Opera Omania QVAE Extant Graece and Latine - 1619
2. A history of Buckingham canal Project .
இங்கு , ஆங்கிலம் , கிரேக்கம் , லத்தின் , சான்ஸ்கிரிட் , அரபிக் , திபெதியன் , ஆகிய மொழி புத்தகங்கள் உள்ளன. தமிழ் புத்தகத்தை தேடி இங்கு செல்ல வேண்டாம் , என்னா ...அங்க அது இல்ல..
இங்கு நிங்களும் உறுப்பினர் ஆகலாம் , ருபாய் 500 /- மட்டுமே.
The Madras Literary Society College Rd ,
Nungambakkam Chennai -6 ( Inside DPI campass )