ரயிலில் பார்த்த அவள் !
அடுக்கி வைக்கபட்ட பற்கள்
ஒளிந்து கொண்ட கண்கள்
ஜொளித்த காது
எட்டி பார்த்த மூக்குமாய்
புன்னகையை அடிக்கடி
செதுக்கி கொண்டு இருந்தாள் !
அவள் கண்களும் கையும்
அவள் வாயைவிட அதிகம்
கதை பேசின !
புடவை அவள் அழகுக்கு
மின்னஞ்சல் அனுப்பிக்
கொண்டு இருந்தது !
கண்ணாடி வளையலும்,
தங்க செயினும்,
அவளுக்கு அழகு
சேர்க்க மறுத்தன !
அவளுக்கு வெட்கம்
கொஞ்சம் பக்கத்தில்தான் இருந்தது
ஆனாலும் அது என் பக்கம்
எட்டி பார்க்க மறுத்தது !
//அவளுக்கு வெட்கம்
கொஞ்சம் பக்கத்தில்தான் இருந்தது
ஆனாலும் அது என் பக்கம்
எட்டி பார்க்க மறுத்தது ! //
சுந்தர் கலக்கலா இருக்குங்க
:)))
வெட்கம் எட்டிப்பார்காட்டா என்னாங்க சுந்தர் ?? வெட்கப்படாம அவங்களை வெட்கப்பட வைக்கிற மாதிரி பேசுங்க ;)))))
எழுதியவர்: ஜொள்ளுப்பாண்டி | 3:56 PM
//ஆனாலும் அது என் பக்கம்
எட்டி பார்க்க மறுத்தது //
நம்மல எல்லாம் என்னிக்கு பாத்து இருக்கு..அதுக்காக எல்லாம் மனச தளறவிடுவோம...கவிதை சூப்பர் :-)
எழுதியவர்: Syam | 11:48 PM
// ஜொள்ளுப்பாண்டி said...
வெட்கம் எட்டிப்பார்காட்டா என்னாங்க சுந்தர் ?? வெட்கப்படாம அவங்களை வெட்கப்பட வைக்கிற மாதிரி பேசுங்க ;)))))
//
வாங்க ஜொள்ளு ...
ரொம்ப நன்றி ....
நானும் முயற்ச்சியை .. கைவிடாமதான் இருக்குறேன் ..
எழுதியவர்: சுந்தர் / Sundar | 10:45 AM
வாங்க ஸ்யாம் , ரொம்ப நன்றி ... கவிதைனு அங்கிகாரம் செய்ததற்கு !
:)
எழுதியவர்: சுந்தர் / Sundar | 10:54 AM
kavithai juperu...
sameebathula Jollu pondy posta paditchathukku etha maathiri oru kavithai ezuthi irukeenga...
rayil payanam
adutha muraiyavathu
uurai adaiya
vaazthukkal....
;))
எழுதியவர்: ஜி | 12:44 AM
This comment has been removed by the author.
எழுதியவர்: சுந்தர் / Sundar | 12:21 PM
ஜி said... தமிழில் !
கவிதை ஜுப்பரு...
சமீபத்துல ஜொள்ளுபாண்டி பதிவ படிச்சதுக்கு எத்தமாதிரி ஒரு கவிதை எழுதிருக்கிங்க ...
ரயில் பயணம்
அடுத்த முறையாவது
ஊரை அடைய
வாழ்த்துக்கள்....
;))
எழுதியவர்: சுந்தர் / Sundar | 12:24 PM
நன்றி ஜி நண்பா,
//ரயில் பயணம்
அடுத்த முறையாவது
ஊரை அடைய
வாழ்த்துக்கள்.... //
ஊரை அடைய முடிகிறது
ஆனால் மயில்தான்
அடம் பிடிக்கிறது !
எழுதியவர்: சுந்தர் / Sundar | 12:29 PM
excellent கவிதை and also the picture :)
எழுதியவர்: Shruthi | 9:26 AM
எளிமையான + அழகான வரிகள்!!!
பயணம் இலக்கை அடைய வாழ்த்துக்கள் :-)
எழுதியவர்: Unknown | 12:00 PM
வாங்க சுருதி , வாங்க அருட்பெருங்கோ ,
உங்கள் இனிய வார்த்தைகள் என்னை மகிழ்வித்தது !
எழுதியவர்: சுந்தர் / Sundar | 10:07 AM
//அவள் கண்களும் கையும்
அவள் வாயைவிட அதிகம்
கதை பேசின !//
பொய் :-). உங்கள் கண் அதைவிட அதிகமாக அவளிடம் பேச முயற்சித்திருக்குமே.
எல்லாம் ஒரு அனுபவம் தான்.
எழுதியவர்: Appaavi | 9:09 AM
//பொய் :-). உங்கள் கண் அதைவிட அதிகமாக அவளிடம் பேச முயற்சித்திருக்குமே. //
கண்டுபிடிச்சிட்டிங்களே !
எழுதியவர்: சுந்தர் / Sundar | 1:09 PM